இனி வங்கியில் தப்புத்தண்டா பண்ணினா.. தப்பிக்கவே முடியாது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய வங்கிகளில் கடன் மோசடி, நிதி மோசடி போன்றவை அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி அமைப்பில் புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளது.

 

இதன் மூலம் ஒரு வங்கியில் ஒருவர் தப்புத் தண்டா பண்ணினா வேறு எந்த வங்கியிலும் அவர் வங்கிச் சேவை பெற முடியாது.

அவரது கணக்கின் தகவல்கள் பிற வங்கிகளுக்குத் தெரியும் வகையிலும், ஆபத்து கணக்காளர் ( red flagging of accounts) என்ற அடையாளத்தை வணிக வங்கி நிர்வாகம் அளித்துவிடும், இதன் பின் அவர் வேறு எந்த வங்கியிலும் கடன், டெப்பாசிட், முதலீடு போன்ற எந்த வங்கிச் சேவையும் பெற முடியாது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் வணிக வங்கியின் கணக்காளர்கள் விபரங்களை ஒருங்கிணைத்து, மோசடி செய்தவர்களின் கணக்கை ஆபத்துக் கணக்குகளாக அறிவித்த பின் அதை மோசடி மையப்பதிவகம் என்கிற Central Fraud Registry-யில் இணைக்கப்படும்.

மோசடி மையப்பதிவகத்தை இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிளும் பயன்படுத்து வகையில் ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது.

 

சிபிஐ

சிபிஐ

இந்த மோசடி மையப்பதிவகம் வங்கிகள் மட்டும் அல்லாமல் சிபிஐ மற்றும் சென்டரல் எக்னாமிக் இண்டலிஜென்ஸ் பிரோ என்கிற CEIB அமைப்பு இயக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இதன் மூலம் புதிய மோசடிகளைத் தடுக்கும் திட்டங்களை வங்கி அமைப்பில் விரைவாகச் செயல்படுத்த முடியும்.

 

ஆபத்துக் கணக்கு
 

ஆபத்துக் கணக்கு

தற்போது வங்கி அமைப்பில் மோசடி கணக்காளர்களின் வங்கி கணக்கை ஆபத்து கணக்காக அறிவிக்கும் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

ஆபத்து கணக்குகளாக அறிவிக்கும் பட்சத்தில் வங்கித்துறையில் உள்ள ஆபத்துக்கள் குறையும்.

 

வராக் கடன்

வராக் கடன்

இப்புதிய திட்டங்கள் மூலம் அடுத்தச் சில வருடங்களில் வராக் கடன் அளவு அதிகளவில் குறையும் என ரிச்ர்வ் வங்கி நம்புகிறது.

நாணயமற்றவர்

நாணயமற்றவர்

இதில் வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்ய நிறுவனங்கள், நிறுவனத் தலைவர் ஆகியோரும் இணைப்படுவர்கள், மேலும் நாணயமற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களும் மோசடி மையப்பதிவகத்தில் இணைக்கப்படுவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ்

இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI's new mechanism for banks to check loan frauds

The RBI on Thursday put in place a new framework to check loan frauds including by way of early warning signals at banks and red flagging of accounts, while swindlers will have no access to further banking finance.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X