மும்பை: இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு குறைப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கடந்த 2 நாட்களாக அதிகளவில் சரிவை சந்தித்து வருகிறது.
அன்னிய முதலீட்டாளர்களின் மாட் வரிப் பிரச்சனையில் மத்திய அரசு ஆலோசனை செய்வதாக அறிவித்த பின் வெள்ளிக்கிழமை சந்தையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
சென்செக்ஸ்
இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே சென்செக்ஸ் உயர்வுடன் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சந்தையில் முதலீடு அதிகரித்ததால், சென்செக்ஸ் புதன்கிழமை இழந்த 745 புள்ளிகளை இன்று ஈடு செய்யும் நிலைக்குத் திரும்பியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 506 புள்ளிகள் உயர்ந்து 27,105.39 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 134.20 புள்ளிகள் வரை உயர்ந்து 8,191.50 புள்ளிகளை எட்டியுள்ளது.
முதலீடு குறைப்பு
கடந்த 15 வர்த்தக நாட்களில் இந்திய சந்தையில் இருந்து சுமார் 1,361 கோடி ரூபாய் அளவிலான பண இருப்பு குறைந்துள்ளது. அதேபோல் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு
நாணய சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 பைசா உயர்ந்து 63.91 ரூபாயை எட்டியுள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு 20 மாத சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 3 சதவீத சரிந்துள்ளதால், உள்ளாட்டுச் சந்தையில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications