மும்பை: இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்ததாலும், அன்னிய முதலீடு அனைத்தும் பங்குச்சந்தையை நோக்கிச் செல்வதாலும், திங்கட்கிழமை நாணயச் சந்தையில் ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு 6 ரூபாய் குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தை சிறப்பான வளர்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவில் குறைந்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை
இன்றைய நாணயச் சந்தையில் 22 கேரட் தங்கம் விலை 2,557 ரூபாயில் 6 ரூபாய் குறைந்து 2,551 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் விலை 7 ரூபாய் குறைந்து 2,728 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல வெள்ளியின் விலை 110 ரூபாய் குறைந்து 37,960 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 மாத சரிவை தழுவி, 5 நாட்களாகத் தொடர் சரிவை சந்தித்து வருகிறது திங்கட்கிழமை நாணய சந்தையில் ரூபாய் மதிப்பு 0.09 பைசா சரிந்து 63.84 ரூபாயாகக் குறைந்துள்ளது.
பங்குச் சந்தை
சந்தையின் துவக்கம் முதலே உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் 393.66 புள்ளிகள் உயர்வுடன் 27,497.46 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி 126 புள்ளிகள் உயர்வுடன் 8,317.50 புள்ளிகளை எட்டியதுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications