மும்பை: அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட மாட் வரிப் பிரச்சனையில் அரசு கவனித்துவருவதால், இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 375 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சந்தையில் முதலீடு அதிகரித்ததாலும், சில்லறை முதலீட்டாளர்கள் சிறப்பாகச்செயல்படுவதாலும், சென்செக்ஸ் குறியீடு 375 புள்ளிகள் வரை உயர்ந்து 27,480 புள்ளிகள் வரை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 110.70 புள்ளிகள் வரை உயர்ந்து 8,302.20 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையிலும் இன்றைய வர்த்தகம் உயர்வைச் சந்தித்துள்ளது. குறிப்பாக ஹாங்காங், ஜாப்பான் நாட்டுச் சந்தைகள்1 சதவீதத்திற்கு அதிகமான உயர்வைச் சந்தித்துள்ளது.
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications