மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியான அன்னியமுதலீட்டுக் காரணமாக 450 புள்ளிகள் வரை உயர்ந்து கடந்த வார சரிவை ஈடுசெய்துள்ளது.
மாட் வரி விதிப்புக் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்த தங்களது முதலீட்டை அதிகளவில்குறைத்துக் கொண்டனர். இதன் காரணமாக இந்திய சந்தையில் கடந்த வாரம் சென்செக்ஸ் 745 புள்ளிகள் சரிந்தது.
சென்செக்ஸ் குறியீடு
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கட்கிழமை வர்த்தகத்தில் 450 புள்ளிகள் வரை உயர்ந்து 27,550 புள்ளிகளைஎட்டியது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 401.91 புள்ளிகள் உயர்வுடன் 27,507.30 புள்ளிகளுடன் சந்தை முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 133.75 புள்ளிகள் உயர்வுடன் 8,325.25 புள்ளிகள் உயர்வுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புச் சந்தித்துத் தொடர் சரிவில்இருந்தது. வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 0.05 பைசா சரிந்து 63. 99 ரூபாயாக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய நாணயச் சந்தையில் 22 கேரட் தங்கம் விலை 2,557 ரூபாயில் 6 ரூபாய் குறைந்து 2,551 ரூபாயாக வர்த்தகம்செய்யப்படுகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் விலை 7 ரூபாய் குறைந்து 2,728 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 110 ரூபாய் குறைந்து 37,960 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஆட்டோமொபைல், பார்மா, அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலானஉயர்வை சந்தித்தது.
குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 5.39 சதவீத உயர்வை சந்தித்தது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
மும்பை பங்குச் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் உயர்வைச் சந்தித்தாலும், பார்தி ஏர்டெல், விப்ரோ, ஐடிசி, ஹிந்துதான் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் சரிவை தழுவியுள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications