சென்னை: ஐரோப்பிய சந்தையில் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் கீரிஸ் நாட்டுடனான பேச்சுவார்த்தை முடிவிற்கு வராத காரணத்தினால், இன்று சர்வதேச சந்தைகள் சரிவை தழுவியுள்ளது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 630 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 630 புள்ளிகள் வரை சரிந்து 26,876 புள்ளிகளை எட்டியுள்ளது. இதனால் சந்தையில் முக்கியத் துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவை தழுவியுள்ளன.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று அதிகளவிலான சரிவை தழுவியுள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி 198.30 புள்ளிகள் சரிந்து 8,126.95 புள்ளிகள் எட்டியது.
முதலீட்டுக் குறைப்பு
இன்றைய வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் முதல் அன்னிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும் பங்குகள் விற்று வந்தனர். இதனால் இந்திய சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம்
மத்திய அரசு இன்று ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் மார்ச் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தகவல்களை வெளியிட உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் சந்தையின் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்று வருகின்றனர்.
உலகச் சந்தைகள்
இந்திய சந்தைக்கு ஏற்றார் போல் சர்வதேச சந்தையிலும் மந்த நிலை நிலவுகிறது.
குறிப்பாகக் ஐரோப்பா, தனது பொருளாதாரத்தை மேம்படுத்த கிரீஸ் நாட்டுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால் இந்திய சந்தையில் முதலீட்டு அளவு பாதித்துள்ளது.
ஜப்பான்
அதேபோல் ஜப்பான், தென் கொரியா ஆகிய சந்தைகள் செவ்வாய்க்கிழமை சந்தையில் 0.1 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இன்றைய நாணய சந்தையில் ரூபாய் மதிப்பு 64 ரூபாய் வரை சரிந்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications