சர்வதேச சந்தையின் தாக்கத்தால் சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்வு!
மும்பை: புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சென்செக்ஸ் 380 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் சூடுபிடித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை மற்றும் டெக்னாலஜி பங்குகள் அனைத்தும் அதிகளவிலான உயர்வைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 630 புள்ளிகள் வரை சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் ஹாங்காங் சந்தைகள் உயர்வுடன் இருந்ததால், சென்செக்ஸ் துவக்கவர்த்தகத்திலேயே 380 புள்ளிகள் உயர்ந்து 27,256.62 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 117.20 புள்ளிகள் உயர்ந்து 8,244.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
இந்நி்லையில் 11 மணியளவில் சென்செக்ஸ் 114 புள்ளிகள் சரிந்து மீண்டும் நிலையான வர்த்தகத்திறகு திரும்பியது.


Click it and Unblock the Notifications