மும்பை: புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்திலேயே 350 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு, 11 மணியளவில் மடமடவெனச் சரிந்தது. இதன் பின் சில மணிநேரங்களுக்குப் பின் மும்பை பங்குச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
மும்பை பங்குச் சந்தை கடந்த ஒரு வாரமாக 27,000 புள்ளிகளை நிலைநாட்ட குட்டிக் கரணம் போட்டு வருகிறது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 376.86 புள்ளிகள் வரை உயர்ந்து 27,250 புள்ளிகளை எட்டியது.
நாடாளுமன்றத்தில் யூரியா-விற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தையில் விவசாயம் மற்றும்உரங்கள் நிறுனங்களின் பங்குகள் அதிகளவில் விர்த்தகம் செய்யப்பட்டன.
நிஃப்டி
நிஃப்டியும் இன்று சென்செக்ஸ் குறியீட்டை போலவே செயல்பட்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 108.65 புள்ளிகள்உயர்வில் 8,235.60 புள்ளிகளை எட்டியது.
உலகச் சந்தைகள்
புதன்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான், பிரான்ஸ், யுகே, ஜெர்மனி, ஆகிய சந்தைகளும் உயர்வுடனே காணப்படுகிறது. இதில்ஹாங்காங் மற்றும் சீன சந்தைகள் மிகவும் குறைவான சரிவை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.1 பைசா உயர்ந்து 63.98 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications