மும்பை: புதன்கிழமை அமெரிக்கச் சில்லறை வர்த்தக நிலை அறிக்கையைப் பார்க்கும்போது பெடர்ல் வங்கி தனது வட்டிவகிதத்தை அடுத்தச் சில மாதங்களுக்கு உயர்த்த வாய்ப்பில்லை எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆசிய சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாகவே ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 35 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 33 ரூபாய் உயர்ந்து 2,784 ரூபாயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் அதிகரித்து 2,603 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல் வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 690 ரூபாய் வரை உயர்ந்து 39460.00 என்ற விலையை எட்டியுள்ளது.
ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.1 பைசா உயர்ந்து 63.89 ரூபாயாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 0.25 பைசா சரிந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 66.56ரூபாயாக உள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 164 புள்ளிகள் சரிந்து 27,000 புள்ளிகளில் தடுமாறி வருகிறது, துவக்க வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 190 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டியும் 52 புள்ளிகள் சரிந்து 8,183.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications