மும்பை: ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் நிலவும் காரணத்தால் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடு குறைந்து வருகிறது.
இதனால் அன்னிய மற்றும் சில்லறை முதலீட்டாளர் இந்திய சந்தையில் ஐடி, பார்மா, வங்கி, மற்றும் டெக்னாலஜி நிறுவனபங்குகளை அதிகளவில் விற்று வருகின்றனர். இதனால் வியாழக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே சந்தை சரிவுடன் துவங்கியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 164 புள்ளிகள் சரிந்து 27,000 புள்ளிகளில் தடுமாறி வருகிறது. துவக்க வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 190 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி
வியாழக்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டியும் 52 புள்ளிகள் சரிந்து 8,183.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில்
இன்றைய வர்த்தகத்தில் ஜப்பான், சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய சந்தைகள் அனைத்தும் சரிவை தழுவியது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.89 ஆக இன்று உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இதன் மதிப்பு 63.96 ரூபாயாக இருந்து குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications