மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை குறைத்ததால் வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 117 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
140 புள்ளிகள் உயர்வு
இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது சில நிமிடங்களில் 140 புள்ளிகள் வரை உயர்ந்தாலும், அடுத்தச் சில நொடிகளில் சரிவை சந்தித்தது சென்செக்ஸ் குறியீடு.
அதன் பின் பல் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த சென்செக்ஸ் 12.30 மணியளவில் மீண்டும் 130 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 117 புள்ளிகள் வரை உயர்ந்து 27,324 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
நிஃப்டியும் இன்று அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, உயர்வுடனே காணப்படுகிறது. இதன் படி நிஃப்டி 38.15 புள்ளிகள் உயர்வுடன் 8,262 புள்ளிகளை எட்டியது.
சர்வதேச சந்தை
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் ஹாங்காங் உயர்வுடன் முடிவடைந்துள்ள நிலையில் சீனா 1.59 சதவீதம் சரிந்துள்ளது.
இதன் தாக்கம் இந்திய சந்தையில் கணிசமாகத் தெரிந்தாலும், இன்றைய வர்த்தகம் உயர்வுடனே முடியும்.
முக்கியத் துறைகள்
மேலும் இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications