மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் பருவகாலச் சந்தை மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பு ஆகியவற்றை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்தஆர்வமுடன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாகச் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகத்திலேயே 146புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 147 புள்ளிகள் வரை உயர்ந்தாலும்,தொடர்ச்சியான உயர் நிலையைத் தக்க வைத்துக்கொள்ளமுடியவில்லை. இதன் மூலம் சென்செக்ஸ் சில புள்ளிகளை இழந்து 120புள்ளிகள் உயர்ந்து 27,443.65 புள்ளிகளை அடைந்ததுள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் பல ஏற்றஇறக்கங்களுடன் 40 புள்ளிகள் உயர்வுடன் 8,302.85 புள்ளிகளைஎட்டியுள்ளது.
சர்வதேச சந்தைகள்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஜப்பான் வர்த்தகம் உயர்வுநிலையை எட்டிய நிலையில், சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள்அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அரசுத் துறை நிறுவனங்களான ஹிந்தால் கோ,கெயில், ஓஎன்ஜிசி. பெல் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில்உயர்வைச் சந்தித்ததுள்ளது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
சந்தையின் முக்கிய நிறுவனங்களான டிசிஎஸ், கோல் இந்தியா, சிப்லா,ஹெச்டிஎஃப்சி ஆகியவை சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications