மும்பை: இந்திய சந்தையில் இன்று பருவநிலை அறுவடை மற்றும்ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு ஆகியவற்றின் எதிரொலியாகச் சென்செக்ஸ் 363 புள்ளிகள் வரை உயர்ந்ததுள்ளது.
சந்தையில் முக்கிய நிறுவனங்களின் வர்த்தக நிலை மோசமாக இருந்தாலும், முதலீட்டு அளவு அதிகரித்துள்ளது. மேலும் நாளைய வர்த்தகமும் உயர்வுடனே காணப்படும். குறிப்பாக வங்கித்துறை பங்குகளில் அதிகளவிலான உயர்வு காணப்படும்.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் 363 புள்ளிகள் உயர்வுடன் 27,687.30 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்றைய வர்த்தகத்தில் உயர்வைச் சந்தித்துள்ளது. வர்த்தக முடிவில் நிஃப்டி 111.30 புள்ளிகள் உயர்வுடன் 8,373.65 புள்ளிகளை எட்டியது.
உலகச் சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை உயர்வுடன் காணப்பட்டாலும், சீனா, ஹாங்காங், பிரட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய சந்தைகள் சரிவைத் தழுவியுள்ளது.
டாலர் மதிப்பு
இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.70 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications