மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் சரிவைச் சந்தித்தாலும், மதிய நேர வர்த்தகத்தில் 130 புள்ளிகள் உயர்வடன் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி, வங்கி, மெட்டல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைச் சந்தித்து வருவதால், மும்பை பங்குச் சந்தை இன்று சரிவில் இருந்து மீண்டது. இதற்கு ஆசியா சந்தையின் வலிமையான நிலையும் ஒரு காரணமாகும்.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 41 புள்ளிகள் சரிவுடன் 27645 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டி 8 புள்ளி்கள் சரிவுடன் 8,365 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று துவக்கத்தில் சரிவைச் சந்தித்தாலும், பின் மிதமான வேகத்தில் 130 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மதியம் 1.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 124.38 புள்ளிகள் உயர்ந்து 27,811.68 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 37.60 புள்ளிகள் உயர்ந்து 8,410 புள்ளிகளை அடைந்துள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவன பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வங்கி மற்றும் ஐடித்துறை பங்குகளில் அதிகளவிலான தாக்கம் இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
தனியார் துறை வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி ஆகியவை சரிய அளவிலான சரிவைத் தழுவியுள்ளது. மேலும் டிசிஎஸ், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் இன்று சரிவை சந்தித்து வருகிறது.
உலகச் சந்தைகள்
செவ்வாய்க் கிழமை வர்த்தகத்தில் ஜப்பான், ஹாங்காங், சீனா, ஜெர்மனி, பிரட்டன், பிரான்ஸ் ஆகிய அனைத்தும் உயர்வுடனே காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications