மும்பை: சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் Ziddu.com என்னும் இணையதள நிறுவனத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் 125,000 டாலர் முதலீடு செய்துள்ளனர்.
இந்தப் பச்சன் அண்ட் கோ திரைத்துறையில் வருடத்திற்குப் பல கோடிகளைச் சம்பாதித்து வந்தாலும், வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்து அதிகளவிலான லாபத்தைப் பார்த்து வருகின்றனர்.
ஜெஸ்ட் டயல்
அமிதாப் பச்சன், இண்டர்நெட் நிறுவனமான ஜெஸ்ட் டயல் நிறுவனம் பங்குச் சந்தையில் குதிக்கும் வேளையில் இந்நிறுவத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளில் முதலீடு செய்தார்.
தற்போது இதன் அளவு 300 சதவீதம் உயர்ந்துள்ளது. இது வெறும் ஒரு உதாரணம் தான். இதேப் போன்று பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது இந்தப் பச்சன் அண்ட் கோ.
பங்கு இருப்பு
இந்த முதலீட்டின் மூலம் பச்சன் அண்ட் கோ இந்த 71 மில்லியன் டாலர் மதிப்புள்ள Ziddu.com நிறுவனத்தின் 3.4 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.
ஹைதராபாத்
இந்நிறுவனம் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்தாலும், ஹைதராபாதில் ஒரு அலுவலத்தை வைத்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 25 பேர் பணியாற்றுவதாகவும் இந்நிறுவனத்தின் நிறுவனர் வெங்கட ஸ்ரீநிவாஸ் மீனவல்லி தெரிவித்தார்.
முதலீடு அதிகரிப்பு..
தற்போது ரிசர்வ் வங்கி எல்ஆர்எஸ் அளவீட்டை 2,50,000 டாலராக அதிகரித்துள்ளதால், பச்சன் குழு இந்நிறுவனத்தில் தனது முதலீட்டை அதிகரிக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications