28,000 புள்ளிகளை எட்டியது மும்பை பங்குச் சந்தை!
மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இரு வாரங்களாகத் தொடர்ந்து 27,000 புள்ளிகளிலேயேவர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மதிய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளை எட்டியது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதன் படி வர்த்தக முடிவில்சென்செக்ஸ் குறியீடு 148 புள்ளிகள் வரை உயர்ந்து 27,957.50 புள்ளிகளை அடைந்தது.
இந்நிலையில் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 37.95 புள்ளிகள் உயர்ந்து 8,458.95 புள்ளிகள் வரை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி, பெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள்அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications