ஓரே நாளில் 300 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ் குறியீடு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்கா பெடரல் வங்கி, அரசு பத்திரங்களின் மீதான வட்டி வகிதத்தைக் கண்டிப்பாக 2015ஆம் ஆண்டின் இறுதிக்குள் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்திய சந்தையில் அதிகளவிலான டாலர் முதலீடு குறைந்துள்ளது.

இதனால் வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே மும்பை பங்குச் சந்தை அதிகப்படியான பாதிப்பை சந்தித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

ஐடிசி நிறுவனத்தின் லாப அளவீடுகள் முதலீட்டாளர்களை ஏமாற்றியதால், ஐடிசி நிறுவன பங்குகள் இன்று அதிகளவில் சரிந்தது. இதேபோல் பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் டாடா பவர் நிறுவன நிக்கப்பட்டுள்ளதால், டாடா குழும பங்குகளுக்கும் சரிவை சந்தித்துள்ளது.

டாடா பவர் நிறுவனத்தின் இடத்தில் தற்போது லுப்பின் நிறுவனம் இடம்பெற உள்ளது.

 

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 313 புள்ளிகள் சரிந்து 27,643.88 புள்ளிகளை எட்டியுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 88.70 புள்ளிகள் சரிந்து 8,370.25 புள்ளிகளை அடைந்தது.

உலகச் சந்தைகள்

உலகச் சந்தைகள்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான், ஹாங்காங், சீனா, பிரட்டன் ஆகிய அனைத்து முக்கிய நாடுகளும் உயர்வுடனே இன்றைய வர்த்தகத்தை முடித்துள்ளது.

டாலர் - ரூபாய்

டாலர் - ரூபாய்

நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.04 பைசா சரிந்து 63.55 ரூபாயாக உள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 1.17 புள்ளிகள் சரிந்து ஒரு பீப்பாய் 65.37 டாலராக உள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

திங்கட்கிழமை நாணய சந்தையில் 24 கேரட் தங்கம் விலை 1 ரூபாய் உயர்ந்து 1கிராம் தங்கம் 2,752 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் விலையும் 1 ரூபாய் உயர்ந்து 1 கிராம் தங்கம் 2,573 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

 

வெள்ளி

வெள்ளி

தங்கத்தைப் போல அல்லாமல் வெள்ளியின் விலை இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 39,365 ரூபாயில் விற்கப்பட்ட 1 கிலோ பார் வெள்ளி இன்று 39,090 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex down 300 points

The BSE Sensex fell on Monday, tracking weaker regional shares as fears about earlier-than-expected U.S. rate hikes weighed on sentiment, while cigarette maker ITC slumped after posting lower-than-expected earnings.
Story first published: Monday, May 25, 2015, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X