அமெரிக்க சந்தை சரிவால் டாலர் முதலீடு குறைவு.. சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்வு..

சென்னை: பங்குச் சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிலையான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீட்டில் மாற்றம் எதும்மில்லை.

இந்நிலையில் இன்று டாலர் முதலீடு மிகவும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு துவக்கத்தில் உயர்ந்தாலும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வர்த்தக முடிவில் 33.25 புள்ளிகள் சரிந்து 27,564.66 புள்ளிகளை அடைந்தது.

இதனால் ஹெச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது.

 

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் உயர்வுடன் முடிந்தாலும், நிப்டி இன்று சரிவுடனே முடிந்தது. இன்றைய வர்த்தக முடிவில் நிப்டி 4.75 புள்ளிகள் சரிந்து 8,334.60 புள்ளிகள் சரிந்தது.

அமெரிக்க சந்தை

அமெரிக்க சந்தை

செவ்வாய்க்கிழமை அமெரிக்க சந்தையில் நிலவிய வீழ்ச்சியால் இந்திய சந்தையில் இன்று முதலீடு அதிகளவில் குறைந்தது. இன்றைய வர்த்தகத்தில் சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரட்டன், பிரான்ஸ் ஆகிய ஆனைத்து சந்தைகளும் உயர்வுடன் காணப்பட்டது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

புதன்கிழமை வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 1.65 சதவீதம் சரிந்து ஒரு பிப்பாய் 63.72 டாலராக விற்கப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இந்திய சந்தையில் டாலர் முதலீடு அதிகளவில் குறைந்ததால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 64 ரூபாயை எட்டியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+