டெல்லி: போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்த வருடம் 6 இந்தியபெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில் தொழிலதிபர்கள் மட்டும் அல்லாமல், அரசியல்வாதிகள், வங்கித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பல வகை துறை சார்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
முதல் இடம்
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியர்கள்
இப்பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார், பாயோ பார்மா துறையின் முன்னணி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் முசம்தார் ஷா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்தியா ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள் ஆவார்.
பெப்ஸி மற்றும் சிஸ்கோ
இந்திய- அமெரிக்கர்களான பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திராநூயி மற்றும் சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான பத்மஸ்ரீ வாரியர் ஆகியோரும் இப்பட்டியலில் அடக்கம்.
டாப் 5 இடங்கள்
ஏஞ்சலா மெர்கல் அவர்களைத் தொடர்ந்து ஹிலாரி கிளின்டன், மெலிண்டா கேட்ஸ், பெடர்ல் ரிசரவ் தலைவர் ஜேனட் யெல்லன், ஜென்டர்ல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீஇஓ மேரி பாரரா, ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
மோடியும்.. சந்தையும்..


Click it and Unblock the Notifications