சென்னை: அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் மிகவும் மந்தமாகச் செயல்படுவதால் பங்குச் சந்தை மற்றும் நாணயச் சந்தைகளில் முதலீடு அதிகளவில் குறைந்து காணப்படுகிறது.
இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் அதிகளவில் காணப்பட்டதால் கடந்த 4 நாட்களாகத் தங்கம் விலை தொடர் சரிவில் உள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் கிராமிற்கு 10 ரூபாய் குறைந்த நிலையில், இன்று கிராமிற்கு 9 ரூபாய் குறைந்து.
இதனால் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை அதிகரித்துள்ளதாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 9 ரூபாய் குறைந்து 2,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 8 ரூபாய் குறைந்து 2,551 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல வெள்ளியின் விலை இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான மாற்றத்தைச் சந்திக்கவில்லை. ஆயினும் கணிசமான விலை சரிவை பதிவு செய்துள்ளது.
இன்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 115 ரூபாய் குறைந்து 38,465 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் மதிப்பு
வியாழக்கிழமை தங்கம் விலை அதிகளவில் குறைந்ததற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து முக்கியக் காரணமாகும்.
இன்று டாலர் மதிப்பு 0.13 பைசா உயர்ந்து 63.83 ரூபாயாக விற்கப்படுகிறது.
முக்கிய நகரங்களில் தங்கம் விலை
சரி இனி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிலவும் தங்கம் விலையைப் பார்ப்போம்.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
பெங்களூரு
மென்பொருள் ஏற்றுமதிக்குப் பெயர்போன பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,540.
ஹைதராபாத்
இந்தியாவின் புதிய மாநிலமான தெலுங்கானா -வின் தலைநகரான ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.25,560.
கொல்கத்தா
மீன் உணவும் கவிதையும் சிறந்து விளங்கும் கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.25,540
டெல்லி
நாட்டின் தலைநகரான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.25,450.
சென்னை
நம்ம ஊர் சென்னையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,510.
மும்பை
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் 22 கேரட் 10 கிராம் தங்கம் ரூ.25,460.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications