மும்பை: நாணயச் சந்தையில் ரூபாய் மதிப்பு உயர்ந்ததாலும், சீனா மற்றும் ஹாங்காங் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்ததாலும், பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை இந்திய சந்தையில் செலுத்தினர், இதனால் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் சூடுபிடித்தது.
இதனால் சந்தையில் இன்று சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது. இதன் காரணமாகப் டெலிகாம், பார்மா, கேப்பிடல் கூட்ஸ், ஆட்டோமொபைல், எண்ணெய் துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
பார்தி ஏர்டெல்
வோடபோன் வைத்திருந்த ஏர்டெல் நிறுவனத்தின் 4.2 சதவீத பங்குகளை 200 மில்லியன் டாலருக்கும் ஏர்டெல்லின் ஹோல்டிங் நிறுவனமான பார்தி கைப்பற்றியதால், பங்குச் சந்தையில் இன்று ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 5.98 சதவீதம் உயர்ந்தது.
ஸ்பைஸ்ஜெட்
7 காலாண்டுகளுக்குப்பின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 22 கோடி ரூபாய் லாபம் சந்தித்துள்ள நிலையில் இன்று இந்நிறுவனப் பங்குகள் 6.61 சதவீதம் உயர்ந்து. காலை வர்த்தகத்தில் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 321.73 புள்ளிகள் உயர்ந்து 27,828.44 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 114.65 புள்ளிகள் வரை உயர்ந்து 8,433.65 புள்ளிகள் வரை உயர்ந்தது.
அதிக லாபம் பெற்ற நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் காலாண்டு முடிவுகளை வைத்துப் பல நிறுவனங்கள் அதிகப்படியான உயர்வைச் சந்தித்துள்ளது. குறிப்பாகப் பார்தி ஏர்டல், மஹிந்திரா, கெயில், மாருதி, கோல் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஹிரோ மோட்டோ கார்ப், டாடா பவர், ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, விப்ரோ, என்டிபிசி ஆகியவை 1% அதிகமான உயர்வைச் சந்தித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
பெல், டாடா மோட்டார்ஸ், ஹிந்தல்ரோ போன்ற நிறுவனங்கள் இன்று அதிகளவிலான சரிவைத் தழுவியது.
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.06 பைசா குறைந்து 63.89 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
தங்கம் விலை
நாணயச் சந்தையில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இன்றைய தங்கம் விலை.


Click it and Unblock the Notifications