26,800 புள்ளிகளுக்கு இறங்கிய சென்செக்ஸ்.. ரிசர்வ் வங்கி எபக்ட் குறையவில்லை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் இந்திய சந்தையை இன்றும் கடுமையாகப் பாதித்ததுள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 450 புள்ளிகள் வரை சரிந்து 27,000 புள்ளிகளுக்குக் குறைவாகச் சரிந்தது.

 

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 660 புள்ளிகள் சர்ந்து சந்தை முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்தது.

மும்பை பங்குச் சந்தை..

மும்பை பங்குச் சந்தை..

புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே வர்த்தகம் சரிவைடை துவங்கியது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை படிப்படியாகக் குறைத்து வந்தனர்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

மதிய நேர வர்த்தகத்தில் சுமார் 12 மணியளவில் சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் வரை சரிந்தது சந்தையைப் பதம் பார்த்தது. அதன் பின் சில புள்ளிகள் உயர்ந்தாலும், சரிவு பாதையிலேயே சென்செக்ஸ் இருந்தது.

வர்த்தக முடிவு

வர்த்தக முடிவு

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் சரிந்து 26,837 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி
 

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று சரிவு பாதையிலேயே உருண்டு ஒடியது. இதன்படி இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 101.35 புள்ளிகள் சரிந்து 8,135 புள்ளிகளை அடைந்தது.

உலகச் சந்தை

உலகச் சந்தை

புதன்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் சீனா சரிவைச் சந்தித்தது. இதனால் சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு அதிகளவில் குறைந்தது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இந்திய சந்தையில் இன்று முதலீடு குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.14 பைசா குறைந்து 63.96 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex breaks 27,000, down about 300 points,

The S&P BSE Sensex fell about 500 points in intraday trade on Tuesday, a day after the Reserve Bank disappointed the markets with just a 25 bps rate cut. The market was expecting a 50 bps cut. Adding to the woes was IMD downgrading its forecast on monsoon to 88% from earlier 93%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X