நியூயார்க்: இன்றைய உலகில் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகின்றனர். இது வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
ஒரு நிறுவனத்தைச் சிறந்த முறையில் இயங்க வைக்கும் சீஇஓ பொறுப்புகளில் கலக்கி வரும் பெண்கள் பலர் உள்ளனர். உதாரணமாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா போன்றவர் நிறையே பேர் உள்ளனர்.
இந்த வகையில் அதிகச் சம்பளம் வாங்கும் பெண் சீஇஓ பட்டியலை ஈக்விலார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கக் கெமிக்கல் நிறுவனமான டுபண்ட் நிறுவனத்தின் தலைவரான எலன் குல்மேன் வருடத்திற்கு 11.3 மில்லியன் டாலர் வருமானத்துடன் இப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். கேட்பெரி சாக்லெட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மான்டெலிஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவரான ஐரீன் ரோசென்பீல்டு 9வது இடத்தைப் பிடித்துள்ளார். உணவு பொருட்கள் நிறுவனமான ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லேன்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பாட்ரிஷியா உர்ட்ஸ் இப்பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க விமானத்துறை சார்ந்த நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் தலைவர் மார்லீன் ஹிவ்சன் இப்பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார். வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள ஐபிஎம் நிறுவனத்தின் தலைவரான வெர்ஜினியா ரோமிட்டி இப்பிட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க விமான மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த ஜென்டரல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பெப்பே நோவாகோவிக் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி அதிகச் சம்பளம் வாங்கும் சீஇஓ பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். வன்பொரருள் மற்றும் மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களிஸ் ஒன்றான ஹெச் பி நிறுவனத்தின் தலைவரான மெக் வித்மேன் இப்பிட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க ஆடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான டிஜேஎக்ஸ் நிறுவனத்தின் தலைவரான காரோல் மெய்ரோவிட்ஸ் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளவர் மரிஸா மேயர், இவர் யாஹூ நிறுவனத்தின் தலைவராவர்.
டுபாண்ட்
மான்டெலிஸ் இண்டர்நேஷ்னல்
ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லேன்டு
லாக்ஹீட் மார்டின்
ஐபிஎம்
ஜென்டரல் டைனமிக்ஸ்
பெப்ஸிகோ
ஹெச்.பி
டிஜேஎக்ஸ் நிறுவனங்கள்
முதல் இடம்..
பெரும் தலைகள்..!


Click it and Unblock the Notifications