மும்பை: இரண்டு நாள் வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்த மும்பை பங்குச் சந்தை, வியாழக்கிழமை வர்த்தகத்திலும் சரிவை சந்தித்து. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தக முடிவில் உயர்ந்தது.
இந்நிலையில் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 23.78 புள்ளிகள் சரிந்து 26,813.42 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டி குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து 4.45 புள்ளிகள் சரிந்து 8,130.65 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் மறுஆய்வுக் கொள்கையின் தாக்கம் இந்திய சந்தையைக் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து பாதித்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசின் மார்ச் மாத அன்னிய முதலீட்டு அளவுகள் குறித்து வெளியிடப்பட்ட முடிவுகள் சந்தை கணிசமான அளவில் பாதித்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகள் அனைத்தும் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications