மும்பை: ஐரோப்பிய சந்தையின் தாக்கத்தால் மும்பை பங்குச் சந்தையில் முதலீடு குறைந்து, அதிகளவிலான பங்குகள் விற்கப்பட்டன.
இதனால் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை வர்த்தகம் சரிவுடனே துவங்கியது.
மதிய வேளையில் பருவமழை கேரள மாநில எல்லையை எட்டியதால் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க ஆயத்தமானது. இதன் காரணமாக மதிய வேளையில் பொதுத்துறை, ஸ்டீல் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வர்த்தகம் அதிகரித்துச் சென்செக்ஸ் 27,000 புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச் சந்தை
கடந்த நான்கு நாட்கள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 26,800 புள்ளிகள் வரை குறைந்து முதலீட்டாளர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 44.93 புள்ளிகள் சரிந்து 26,768 புள்ளிகளுக்கு மீண்டும் தள்ளப்பட்டது. மேலும் பருவ மழை துவங்கியதால் நாட்டின் உணவு பணவீக்கம் கூடிய விரைவில் குறையும் என நம்பப்படுகிறது.
நிஃப்டி
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று நிஃப்டி 15.95 புள்ளிகள் சரிந்து 8,114.70 புள்ளிகளை எட்டியது.
கிரீஸ்
ஐரோப்பிய சந்தையில் கிரீஸ் நாட்டுக்குத் தகுந்த நிதியுதவி கிடைக்காமல் ஐஎம்எப் அளிக்க வேண்டிய தவணை தொகையை அளிக்க முடியாது என அந்நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தான் ஐஎம்எப் தவணை தொகை அளிக்க வேண்டிய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கத்து.
நெஸ்லே
மேகி நூடுல்ஸ் பிரச்சனையின் காரணமாகச் சுவிஸ் நாட்டு நிறுவனமான நெஸ்லேவின் பங்கு மதிப்பு 73.75 ரூபாயில் இருந்து 70.55 ரூபாயாகக் குறைந்துள்ளது.
மேலும் இந்நிறுவனம் நெஸ்லே நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் தரமானவை, ஆயினும் இப்பிரச்சனைகள் முடியும் வரை மேகி நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விநியோம் நிறுத்தப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications