மும்பை: வெள்ளிக்கிழமை வெளியான தொழிற்துறை உற்பத்தி அளவு அறிக்கை, பங்குச்சந்தையை வர்த்தகத்தை மேம்படுத்த முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஏப்ரல் மாத்தில் நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தி அளவு கணிப்புகளை விடவும் இரட்டிப்பு அளவு அதிகரித்துள்ள காரணத்தினால், சந்தையில் இன்று முதலீடு அளவு அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை
கடந்த வாரம் பங்குச்சந்தை மந்தமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்றைய வர்த்தகம் துவக்கும் முதலே உயர்வைச் சந்தித்தது. மேலும் 2 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 295 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 161 புள்ளிகள் வரை உயர்ந்து 26,586.55 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே சந்தையில் சிறப்பாகச் செயல்படும் டாப் 50 நிறுவனங்களின் வர்த்தகக் குறியீடான நிஃப்டி 31.00 புள்ளிகள் உயர்ந்து 8,013.90 புள்ளிகளை அடைந்தது.
லாபம் மற்றும் நஷ்டம்
இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைச் சந்தித்தது.
இதேநிலையில் வங்கிப் பங்குகள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது.
சன் டிவி
மேலும் உள்துறை அமைச்சகம் சன் நெட்வொர்க் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இதனால் சன் டிவியின் பாதுகாப்புப் பிரச்சனைகள் களையப்படும் என முதலீட்டாளர்களுக்கு நிம்பிக்கை கிடைத்துள்ளது.
இதன் காரணமாக இன்று சன் டிவி பங்குகள் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications