சரிவில் தொடங்கி உயர்வில் முடிந்த சென்செக்ஸ்!
மும்பை: செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் தனியார் துறை நிறுவனங்களின் மீதான முதலீடுகளை அதிகளவில் குறைத்ததால், பங்குச்சந்தை வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
இதனால் சந்தையில் முதலீட்டு அளவும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சரிவுடன் துவங்கினாலும், வர்த்தக முடிவில் 130 புள்ளிகள் உயர்ந்து 26,718 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் சந்தை வர்த்தக முடிவில் 45.50 புள்ளிகள் வரை உயர்ந்து 8,059.95 புள்ளிகள் வரை உயர்ந்தது.
காலை வர்த்தகத்தில் வங்கிப், ஐடி, பொதுத்துறை நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான சரிவைத் தழுவியது. வர்த்தக முடிவில் இதன் நிலை முழுமையாக மாறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications