மும்பை: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் பாலிசி அறிவிப்பிற்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை துவங்கிய நிலையில் ஆசிய சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது.
இதன் எதிரொலி இந்தியா சந்தையில் பரவலாகத் தெரிந்தது. இதன் படி மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடனே காணப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 240 புள்ளிகள் வரை உயர்ந்தது, ஆனால் வர்த்தக முடிவு வரை இதே நிலை தொடரவில்லை. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 146 புள்ளிகள் வரை உயர்ந்து 26,832.66 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் உயர்வுடனே முடிவடைந்தது. இதன் படி வர்த்தக முடிவில் சுமார் 44 புள்ளிகள் வரை உயர்ந்து 8,091.55 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நுகர்வோர், பார்மா, ஐடி நிறுவன பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications