மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி வகிதத்தை 0.25 சதவீதமாகக் குறைத்ததால், ஆசியா சந்தையில் முதலீடு குவிந்து வருகிறது. இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 280 புள்ளிகள் வரை இன்று உயர்ந்தது.
பங்குச் சந்தையில் இந்திய நிறுவனங்களின் இன்றைய நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.
மும்பை பங்குச் சந்தை
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தையின் வர்த்தகம் துவக்கும் முதலே உயர்வு பாதையில் இருந்தால் அன்னிய முதலீடு அதிகரிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் வரை உயர்ந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 280 புள்ளிகள் வரை உயர்ந்தாலும், முடிவில் 200.34 புள்ளிகள் உயர்வுடன் 27,316.17 புள்ளிகளை அடைந்தது.
880 புள்ளிகள்
கடந்த 5 நாட்கள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 880 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
நிஃப்டி
இன்று சந்தையில் முக்கிய நிறுவனங்களில் முதலீடு அதிகரித்ததால் நிஃப்டி குறியீட்டு 50.35 புள்ளிகள் வரை உயர்ந்து 8,224.95 புள்ளிகளை அடைந்தது.
அமெரிக்கா
அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டிக் குறைப்பினால் வளரும் நாடுகளில் சந்தையில் அதிகளவிலான முதலீட்டை எதிர்பார்க்கலாம். குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் முதலீட்டு அளவு புதிய உச்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளது.
முக்கியத் துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு, கேப்பிடல் கூட்ஸ், ஹெல்த்கேர், ஐடி துறை பங்குகள் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.


Click it and Unblock the Notifications