டெல்லி: ஊழல் வழக்கில் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் அவர்களுக்கு பெயில் பெற ரூ. 5 ஆயிரம் கோடி ரொக்கம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை உச்ச நீதிமன்றம் கோரியது.
வங்கிகள் கடைசி நேரத்தில் உத்திரவாத்ததை அளிக்க மறுத்தால் பெயில் பெற முடியவில்லை. மேலும் பெயில் பெற்றாலும் 18 மாதத்திற்குள் 36,000 கோடி தொகை செலுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் புதிய உத்திரவை பிறப்பித்துள்ளது.
விசாரணை
நீதிபதிகள் டி.எஸ். தாகுர், ஏ.ஆர். தவே, ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
சிக்கல்
சுப்ரதா ராய் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். ரூ. 5 ஆயிரம் கோடிக்கு வங்கி ஒப்புகை வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக அவர் கூறினார்.
வங்கிகள்
முன்பு உத்திரவாதம் அளிக்க முன் வந்த வங்கிகளும் செபியின் கட்டளை மற்றும் நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால், வங்கிகள் கடைசி நேரத்தில் பின்வாங்கியது.
சுப்ரதா ராய்
2014-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் 65 வயதாகும் சுப்ரதா ராய். முதலீட்டாளர்களிடம் திரட்டிய ரூ. 36 ஆயிரம் கோடியை, அவரை விடுவித்த 18 மாதங்களுக்குள் 9 தவணைகளில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியது.
மீண்டும் ஜெயில்
சுப்ரதா ராய் சார்பில் அளிக்கப்படும் வங்கி பிணைத் தொகைகளை ஏற்கலாம் என்று செபி-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்தத் தவணைத் தொகைகளைத் திரும்பச் செலுத்துவதில் 3 தவணைகள் தவறினால் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
விடுதலைக்குப் பின்
ராய் மற்றும் நிறுவன இயக்குநர்கள் இருவர் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
வசதிகள்
நிதியை திரட்ட ஏதுவாகச் சுபத்ரா ராய் அவர்களுக்குச் சிறைச்சாலைக்குள் சுப்ரதா ராய்க்கு டெலிபோன் மற்றும் இணையதள வசதி அளிக்க உத்தரவிட்டது.
ரூ.10,000 கோடி
இந்த விவகாரத்தைத் தீர்க்க வேண்டுமெனில் சஹாரா குழுமம் ரூ. 10 ஆயிரம் கோடியை செலுத்தினால்தான் சுப்ரதா ராய் அவர்களை விடுதலை செய்ய முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications