மும்பை: கிரீஸ் நாட்டின் நிதியுதவி நெருக்கடியைச் சமாளிக்கப் புதிய திட்ட வடிவைத்தை அமைத்துள்ளது, இதற்கான பரித்துரையைக் கிரீஸ் ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய சென்டரல் வங்கியில் சமர்ப்பித்துள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய சந்தை மிதமான அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய சந்தையில் வர்த்தகத்தின் அளவு குறைந்து, மிகவும் சொற்பமான அளவில் மட்டும் மும்பை பங்குச் சந்தை உயர்ந்தது.

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை உயர்ந்தது, ஆனால் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துச் சந்தை மிதமான அளவில் வர்த்தகத்தைப் பெற்றது.
இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 74 புள்ளிகள் உயர்ந்து 27,804.37 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் நிஃப்டியும் வர்த்தக முடிவில் 28.45 புள்ளிகள் உயர்ந்து 8,381.55 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, லூபின் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications