மும்பை பங்குச் சந்தையின் வியாழக்கிழமை வர்த்தகத்தில் கேப்பிடல் சந்தை மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றதால் காலை முதல் மந்தமாக இருந்த வர்த்தகம் மதிய வேளையில் 180 புள்ளிகள் வரை உயர்வு கண்டது.
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி அளிக்கும் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் நிலை உள்ளதால் சர்வதேச சந்தையிலும் இன்றைய வர்த்தகம் மந்த நிலையைப் பெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 166.30 புள்ளிகள் உயர்ந்து 27,895.97 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் உயர்வுடன் முடிவடைந்தள்ளது.
வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 37.15 புள்ளிகள் உயர்ந்து 8,398.00 புள்ளிகளை எட்டியது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் விப்ரோ, சிப்லா, ஓஎன்ஜிசி, என்டிபிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் ஐடிசி கோல் இந்தியா போன்ற முக்கிய நிறுவனங்களும் சரிவைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications