மும்பை: இந்தியாவின் முக்கியத் துறைகள் குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியுள்ளதாலும், கிரீஸ் மற்றும் ஐரோப்பிய சந்தையின் தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளதாலும் இன்று மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.
புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்து 28,000 புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச்சந்தை
ஐரோப்பிய பொருளாதார நிலை இந்திய சந்தையை நேரடியாகப் பாதிக்காது என அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகச் சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலேயே நிலையான வேகத்தில் உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு 3 மணியளவில் 300 புள்ளிகளை வரை உயர்ந்து 28,000 புள்ளிகளை எளிமையாக எட்டியது.
வர்த்தக முடிவில் 240.04 புள்ளிகள் உயர்ந்து 28,020.87 புள்ளிகளை அடைந்து சந்தை முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் நிலையான வேகத்தில் 84.55 புள்ளிகள் உயர்ந்து 8,453.05 புள்ளிகளை எட்டியது.
ரூபாய் மதிப்பு
புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.59 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications