மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் காணப்பட்டது. அதன் பின் ஊசலாட்டம் காணப்பட்டாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடனே முடிந்தது.
வெள்ளிக்கிழமை ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தின் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் சூடு குறையாமல் வர்த்தகம் செய்யப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை
இந்திய சந்தையின் ஏற்பட்ட இன்றைய உயர்விற்கு ஐரோப்பா சந்தையில் நிலவும் மந்தநிலை, அமெரிக்கச் சந்தையின் வேலைவாய்ப்புக் குறைவு, ஆசிய சந்தையில் குவிந்த அதிகப்படியான முதலீடு ஆகியவை மிகமுக்கிய காரணமாக உள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 146.99 புள்ளிகள் உயர்ந்து 28,092.79 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி இன்று உயர்வுடன் முடிவடைந்தது. இதனால் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 8,484.90 புள்ளிகளை எட்டியது.
லாபமடைந்த நிறுவனங்கள்
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று எச்டிஎப்சி, ஹீரோ மோட்டோ கார்ப், லூபின், எச்டிஎப்சி வங்கி, பெல், டாக்டர் ரெட்டி, டிசிஎஸ், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
ரிலையன்ஸ் மற்றும் டாடா
பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, கெயில்ஸ கோல் இந்தியா மற்றும் தனியார் துறையில் ரிலையன்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் சரிவை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications