ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் சொன்னது பலித்தது.. சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்வு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிரீஸ் பொருளாதாரம் இந்திய சந்தையை நேரடியாகப் பாதிக்காது, ஆசிய சந்தையின் மூலம் கணிசமாகப் பாதிக்கும் என ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், சந்தா கோச்சார் ஆகியோர் ஆணித்தரமாகக் கூறினார். இன்றைய வர்த்தகத்தில் இவர்களது கணிப்புகள் பலித்துள்ளது.

பொது வாக்கெடுப்பில் கிரீஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தைகள் சரிவைச் சந்தித்தது. ஆனாலும் இந்திய சந்தை சரிவுடன் துவங்கி குறிப்பிடத்தக்க அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கியது. 11 மணியளவில் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகத்தைப் பதம் பார்த்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இந்நிலையில் வர்த்தக முடியும் நேரத்தில் பங்குச் சந்தையில் அதிகளவிலான பங்கு விற்பனையைச் சந்தித்தது. இதன் காரணமாகச் சென்செக்ஸ் 115.97 புள்ளிகள் வரை உயர்ந்து 28,208.76 புள்ளிகளை அடைந்தது.

 நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு சரிவுடன் துவங்கி 37.25 புள்ளிகள் வரை உயர்ந்து 8,522.15 புள்ளிகளை அடைந்தது.

ரூபாய் டாலர்

ரூபாய் டாலர்

மேலும் இன்றைய நாணயச் சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.46 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிளாஷ்பேக்

பிளாஷ்பேக்

கிரீஸ் பொருளாதார சரிவு: ஒரு பிளாஷ்பேக்கிரீஸ் பொருளாதார சரிவு: ஒரு பிளாஷ்பேக்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE Sensex rises 115.97 pts to close at 28,208.76

The BSE Sensex that opened 300 points down, shed off its days losses and bounced back to trade above 40 points on Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X