அதிக சம்பளம் பெறுவதில் முகேஷ் அம்பானிக்கு போட்டியாக ஐடிசி நிறுவன தலைவர்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கடந்த 7 வருடமாகச் சம்பள உயர்வு பெறவில்லை என்றாலும் இவரது சம்பளத்தின் அளவு ரொம்ப அதிகமாம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான இவர், இந்நிறுவனத்தின் நடுத்தர ஊழியரின் சம்பளத்தை விட 205 மடங்கு அதிகமான சம்பளத்தைப் பெறுகிறார். ஒ மை காட்..

இவர் மட்டும் அல்ல இவரைப் போல் பலர் உள்ளனர். வாங்க பார்போம்..

15 கோடி ரூபாய் சம்பளம்
 

15 கோடி ரூபாய் சம்பளம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சம்பளம் வருடத்திற்கு 15 கோடி ரூபாய். 2014-15ஆம் ஆண்டில் இந்நிறுவனப் பணியாளர்களுக்குச் சராசரியாக 3.71 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விப்ரோ அசிம் பிரேம்ஜி

விப்ரோ அசிம் பிரேம்ஜி

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல பொருட்களை உற்பத்தி செய்யும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, தனது நிறுவனத்தின் நடுத்த ஊழியர்களின் சம்பளத்தை விட 89 சதவீதம் அதிகமாகப் பெறுகிறார்.

ஐடிசி

ஐடிசி

பல பொருள் உற்பத்தி செய்யும் ஐடிசி நிறுவனத்தின் தலைவர் ஓய்.சி.தேவேஸ்வர் இந்நிறுவனப் பணியாளர்களை விடவும் 439 மடங்கு அதிகச் சம்பளம் பெறுகிறார். இவருக்கு ஆண்டு வருமானம் 15 கோடி ரூபாயாகும்.

எச்.டி.எப்.சி

எச்.டி.எப்.சி

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான எச்.டி.எப்.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பாரீக், பணியாளர்களைவிட 19 மடங்கு அதிகம் சம்பளம் பெறுகிறார்.

சந்தா கோச்சார்
 

சந்தா கோச்சார்

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார், இவ்வங்கியின் நடுநிலை ஊழியர்களின் சம்பளத்தை விடவும் 97 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.

ஆதித்தியா பூரி

ஆதித்தியா பூரி

எச்டிஎப்சி வங்கியின் தலைவர் தலைவர் ஆதித்தியா பூரி தனது ஊழியர்களை விடவும் சுமார் 117 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஷிக்கா சர்மா தனது பணியாளர்களை விட 74 மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார்.

இன்போசிஸ்

இன்போசிஸ்

நாட்டின் அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான இன்போசிஸ் நிறுவன தலைவர் விஷால் சிக்கா தனது பணியாளர்களை விடச் சுமார் 116 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.

ஹிந்துஸ்தான் யுனிலீவர்

ஹிந்துஸ்தான் யுனிலீவர்

இந்நிறுவனத்தின் தலைவரான சஞ்சீவ் மேத்தா 93 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.

வேதாந்தா

வேதாந்தா

சுரங்கம் மற்றும் கனிவள உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் தனது பணியாளர்களை விட 293 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.

நிறுவன சட்டம்

நிறுவன சட்டம்

இந்தியாவில் புதிய நிறுவனச் சட்டம் மற்றும் செபியின் கார்பரேட் கவர்நன்ஸ் கோடு கீழ் பங்குச்சந்தையில் பட்டியிலிட்டுள்ள நிறுவனங்கள் சம்பள விகிதம், உயர் அதிகாரிகளின் சம்பள உயர்வு, போன்ற விபரங்களை வெளியிட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani gets 205-times of median pay; ITC's Deveshwar gets 439-times

Billionaire industrialist and India's richest Mukesh Ambani has not taken a pay hike for seven years, but his salary is over 205-times that of the median employee remuneration at Reliance Industries (RIL).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more