மும்பை: கிரீஸ் பிரச்சனையில் இருந்து ஐரோப்பிய சந்தை மீண்டு வரும் நிலையில், சீனா புதிய சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் ஆசிய சந்தை அனைத்தும் இன்று கடுமையான பாதிப்பை சந்தித்தது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 530 புள்ளிகள் வரை சரிந்து மும்பை பங்குச் சந்தை ஆட்டம் கண்டது.
சீன சந்தை
கடந்த ஒரு வாரமாகச் சீன பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மந்த நிலையைக் காரணம் காட்டி தொடர் பங்கு விற்பனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தைச் சரிசெய்யச் சீன அரசு கடந்த 8 மாத்தில் 4 முறை வட்டி வகிதத்தைக் குறைத்துள்ளது.
ஆசிய சந்தைகள்
ஆசிய கண்டத்தில் ஏன் உலகளவில் சந்தை முதலீட்டில் அதிக மதிப்புடைய நாடுகள் பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சீன சந்தையின் வீழ்ச்சி ஆசிய சந்தையை முழுவதும் பாதித்துள்ளது.
குறிப்பாக இந்தியா, ஹாங்காங் போன்றவை அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. சீன வீழ்ச்சியில் ஜப்பான் சந்தை 4 சதவீதம் அளவிற்குச் சரிவை பதிவு செய்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 483.97 புள்ளிகள் சரிந்து 27,687.72 புள்ளிகளை எட்டிய மும்பை பங்குச் சந்தையைப் பதம் பார்த்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போவே நிஃப்டியும் இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவை பதிவு செய்தது. வர்த்தக முடிவில் நிஃப்டி 147.75 புள்ளிகள் குறிந்து 8,363.05 புள்ளிகளை எட்டியது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, கெயில் போன்ற முன்னணி நிறுவனங்களும் சரிவை சந்தித்தது.
தப்பித்த நிறுவனங்கள்
சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் இன்று 0.04 சதவீத உயர்வு பெற்று குறைந்த அளவில் லாபம் பெற்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications