தங்கம் விலை கிராமிற்கு 20 ரூபாய் சரிவு.. பொறுமையுடன் காத்திருக்கும் மக்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கிரீஸ் பொருளாதாரப் பிரச்சனையின் காரணமாக ஐரோப்பிய சந்தை முழுவதும் வர்த்தகம் சரிவை சந்திக்கவில்லை என்றாலும் மந்தமடைத்துள்ளது, ஆமெரிக்கவில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளாதால் நாஸ்டாக் மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாகக் முதலீட்டாளர்கள் சீன சந்தையில் உள்ள தங்களது முதலீட்டை பாதுகாத்துக்கொள்ள தொடர் விற்பனையில் இறங்கியுள்ளனர். இதனால் சீன சந்தை அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நாணய சந்தையில் சர்வதேச நாடுகளின் முதலீடு முற்றிலும் குறைந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

நாணய சந்தையில்

நாணய சந்தையில்

பொதுவாக நாணய சந்தையில் முதலீடு அதிகரித்தால் தங்கம், வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் மதிப்புக் கணிசமாக உயரும்.

ஆனால் தற்போது சர்வதேச பங்குச்சந்தைகள் அனைத்தும் மேசமடைந்து வருவதால் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல், நாணய சந்தையிலும் வர்த்தகம் பாதித்துள்ளது.

 

முதலீடு குறைவு

முதலீடு குறைவு

கடந்த 2 வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில் புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமிற்கு 20 ரூபாய் சரிந்துள்ளது.

மக்களின் கணிப்பு

மக்களின் கணிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாறுப்பட்ட நிலை நிலவி வருவதால் நகைகடைகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது என நகைகடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை

தங்கம் விலை

இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை கிராமிற்கு 20 ரூபாய் சரிந்து 2649 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கம் விலை 19 ரூபாய் சரிந்து 2,458 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

வெள்ளி

வெள்ளி

தங்கத்தைப் போல் வெள்ளியின் வர்த்தகமும் அதிகளவில் பாதித்துள்ளதால், வெள்ளியின் விலை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 1,545 ரூபாய் குறைந்து 34,235 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

டாலர் - ரூபாய்

டாலர் - ரூபாய்

நாணய சந்தையில் ரூபாய் மதிப்பு நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.17 பைசா குறைந்கு 63.43 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold rate struggles near four-month lows

Gold rate languished near its lowest level since March on Wednesday as the ongoing Greek debt crisis boosted the dollar, offsetting any safe-haven demand from uncertainty in the euro zone, with other precious metals also taking a tumble.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X