மும்பை: கிரீஸ் நிலைப்பாட்டால் சீன சந்தையில் வர்த்தகம் தடம் மாறியுள்ளது. ஏற்கனவே பொருளாதாரப் பிரச்சனையில் தவித்து வரும் சீனாவிற்கும் முதலீட்டாளர்களின் பங்கு விற்கும் மனநிலை மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை அதிகளவில் விற்று வருவதால் சீனா பங்குச்சந்தை இன்று 8 சதவீதம் வரை சரிந்தது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடன் துவங்கி சென்செக்ஸ் 530 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 527.30 புள்ளிகள் குறைந்து 27,644.39 புள்ளிகளை அடைந்து, 28,000 புள்ளிகள் என்ற நிலையில் இறங்கியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று அதிகளவிலான சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 161.20 புள்ளிகள் வரை சரிந்து 8,349 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதனால் சந்தையில் முன்னணி நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications