விவசாயிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் திட்டம்.. தீவிர ஆலோசனையில் மத்திய அரசு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்குப் புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை வடிவமைக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

 

இக்காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு விவசாயி தனது நிலத்தில் செலவிடப்படும் தொகை மற்றும் விவசாயி வங்கிகளில் வாங்கிய கடன் ஆகிய அனைத்தும் அடங்கும் படி வடிவமைத்து வருகிறோம் என ஜேட்லி கூறினார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

மும்பையில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதியமைச்சர், கூடிய விரைவில் இந்திய விவசாயிகளின் கவலை மற்றும் கடன் சுமையைத் தீர்க்கும் வகையில் புதிய இன்சூரன்ஸ் திட்டம் வெளியிடப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.

கார்ப் (Crop) இன்சூரன்ஸ்

கார்ப் (Crop) இன்சூரன்ஸ்

தற்போது புழக்கத்தில் உள்ள கார்ப் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன் தொகைக்கு மட்டுமே ஈடுசெய்யும் அளவில் உள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த சில வருடங்களில் விவசாயத் துறை வளர்ச்சியில் தொடர் சரிவை மட்டுமே சந்தித்துள்ளது.

குறைந்தபட்சமாக 4 சதவீத வளர்ச்சியைக் கூட நிலையாக வைக்க முடியவில்லை என ஜேட்லி கூறினார்.

உற்பத்தி சரிவு..
 

உற்பத்தி சரிவு..

இந்தியாவில் விவசாயப் பொருட்களின் உற்பத்தி கணிசமான அளவில் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் 85 சதவீத விவசாயிகள் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்து வருகின்றனர். அதிலும் அதிகப்படியான செலவுகள், குறைவான உற்பத்தி, விவசாயிகளின் கடன் நிலுவை, இயல்பு நிலைக்குப் பொருந்தாத காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மாறுபட்ட பருவமழை காலம் ஆகியவை இச்சந்தையின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கிறது.

மழை பெய்தும்.. பொய்த்தது..

மழை பெய்தும்.. பொய்த்தது..

இந்தியாவில் பருவ மழை காலத்தில் மழை அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் 25 சதவீத அதிக மழையும், ஜூலை மாதம் 50 சதவீத குறைவாக மழை பெய்யும் நிலை உள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

ரிசர்வ் வங்கித் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான் மத்திய அரசின் விவசாயிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் திட்ட ஆலோசனை குறித்து உறுதி அளித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt working on new agri insurance scheme for farmers: Jaitley

Government is working on a new agriculture insurance scheme that will cover all the inputs put by a farmer into his farm as also the loans taken by him, finance minister Arun Jaitley said on Sunday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X