மும்பை: இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா, ஆட்டோமொபைல் முதல் சாப்ட்வேர் வரை அனைத்து துறைகளிலும் செயல்படுகிறது. இந்நிலையில் புதிதாக ஒரு துறையில் மஹிந்திரா குழுமம் தற்போது இறங்கியுள்ளது.
17 பில்லியன் டாலர் மதிப்புள்ள மஹிந்திரா குழுமம் தனது சொந்த நிறுவன பெயரில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் போன்றவற்றையும் விற்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும் இதனை இந்தியாவின் முன்னணி பிரான்ட் பொருட்களாக (மேம்பட்ட தரத்துடன்) மாற்ற திட்டமிட்டுள்ளது.
முதல் முறையாக
இந்நிறுவனம் ஏற்கனவே உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்தாலும், இந்தியாவில் சந்தையில் இப்போது தான் கால்தடம் பதித்துள்ளது.
வரிவாக்கம்
மஹிந்திராவின் உணவு வர்த்தகத்தைப் பி2பி (Business-to-Business) முறையில் இருந்து பி2சி (Business-to-Customer) முறைக்கு மாற்றம் செய்து தனது பழங்கள் வர்த்தகமான சபரோ பிராண்டை புதிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளது.
அதேபோல் தாணிய வகைகள் விற்பனை செய்ய NuPro என்னும் புதிய பிராண்டை துவங்க உள்ளது.
விவசாய வர்த்தகம்
இக்குழுமத்தின் விவசாய வர்த்தகத்தை 2015ஆம் ஆண்டில் இரட்டிப்பாக்க மஹிந்திரா குழுமம் முடிவு செய்துள்ளது.
இதன்படி 2014-15ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் விவசாய வர்த்தகம் ரூ.600 கோடியாக உள்ளது, தற்போது இதன் அளவு ரூ.1,000 கோடி ரூபாய் வரை உயர்த்த மஹிந்திரா குழுமம் திட்டமிட்டு இதற்கான பணிகளையும் துவங்கியுள்ளது.
அசோக் சர்மா
மஹிந்திரா குழுமத்தின் விவசாய வர்த்தகத்தின் தலைவர் அசோக் சர்மா கூறுகையில், "இப்பிரிவைக் கடந்த 4 வருடத்திற்கு முன் துவங்கப்பட்டது. 80 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் அளித்த இத்துறை இக்குறைவான காலகட்டத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளது." எனக் கூறினார்.
மூன்று முக்கியத் துறைகள்
தற்போது நிறுவனம் விதைகள், விவசாய உரங்கள் மற்றும் மைக்ரோ இரிகேஷன் ஆகிய முக்கியப் பரிவுகளை மையமாகக் கொண்டு செயல்பட உள்ளது.
பழங்கள் மற்றும் தாணியங்கள்
அதுமட்டும் அல்லாமல் பெல்ஜியன் நிறுவனமான யுனிவெஜ் கூட்டணியில் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்களை விற்கத் திட்டமிட்டுள்ளது. தாணியம் மற்றும் பருப்பு வகைகளை NuPro என்னும் புதிய பிராண்ட் மூலம் விற்க திட்டமிட்டுள்ளதாக அசோக் சர்மா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications