இந்திய சந்தையை உயர்த்திய கிரீஸ் பொருளாதாரம்!
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி கிடைத்ததன் மூலம் காலை முதல் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச் சந்தை 12 மணிக்குப்பின் ஆசிய சந்தையின் உயர்வின் மூலம் சென்செக்ஸ் 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்சையின் சென்செக்ஸ் குறியீடு 299.79 புள்ளிகள் உயர்ந்து 27,961.19 புள்ளிகளை எட்டியுள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 99.10 புள்ளிகள் உயர்ந்து 8,459.65 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி உறுதியான அடுத்தச் சில நெடிகளில் ஐரோப்பிய சந்தை மற்றும் ஆசிய சந்தைகள் உயர்வடையத் துவங்கியது. இதன் காரணமாகவே இன்று சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications