மும்பை: கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவிக்கான ஒப்புதல் கிடைத்துள்ளதால் ஐரோப்பிய சந்தையும், சீனாவில் ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், ஈரான் ஒப்பந்தம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்ததாலும் இந்திய சந்தை இன்று நிலையான வர்த்தக்ததைப் பெற்று உயர்வுடன் முடிவடைந்தது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்சதையின் சென்செக்ஸ் குறியீடு 265 புள்ளிகள் வரை உயர்ந்து 28,198.29 புள்ளிகளை அடைந்தது.
கடந்த இரு வார வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 28,000 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப் போராடி வருகிறது. அதிலும் கடந்த வாரம் சீன சந்தையின் தாக்கத்தால், இந்திய சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி 69.70 புள்ளிகள் உயர்ந்து 8,523.80 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அனைத்து நிறுவனங்களும் குறிப்பிதக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்றது. சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஸ்டேட் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் மட்டும் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications