மும்பை: பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கி நிலையான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் சென்செக்ஸ் குறியீடு சுமார் 260 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
சர்வதேச சந்தைகளில் வியாழக்கிழமை நிலயான வர்த்தகத்தைப் பெற்றதால், ஆசிய மற்றும் இந்திய சந்தை அதிகளவிலான முதலீட்டைப் பெற்றது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 247.83 புள்ளிகள் உயர்ந்து 28,446.12 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடும் இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்று 84.25 புள்ளிகள் உயர்வுடன் 8,605.05 புள்ளிகளை எட்டி சந்தை முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் எல் அண்ட் டி, கெயில், டிசிஎஸ், ஹீரோமோட்டோகார்ப், விப்ரோ, மஹிந்திரா மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் 1.1 சதவீத சரிவு வரை சந்தித்தது.
மேலும் மத்திய அரசு வங்கித்துறையில் சில முக்கிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கியதால் இன்று வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.


Click it and Unblock the Notifications