மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்த அறிகுறிகள் தெரியப்படுவதால், சர்வேதச சந்தையில் இன்று தங்கம் மற்றும் பிளாட்டினம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்திலேயே தங்கம் விலை சுமார் 5 வருட சரிவை பதிவு செய்து தங்க முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமிற்கு 54 ரூபாய் சரிந்துள்ளது.
4 சதவீத சரிவு
திங்கட்கிழமை நாணய சந்தையில் வர்த்தகம் துவங்கி சில நிமிடங்களில் தங்கம் விலை சுமார் 2 சதவீதம் வரை சரிந்துள்ளது. தங்கத்தைப் போலப் பிளாட்டினம் மீதான விற்பனையும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பிளாட்டினம் விலை சுமார் 5 சதவீதம் சரிவுடன் துவங்கியது. இந்த விலை நிலை கடந்த 2009ஆம் ஆண்டு நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தங்கம் விலை..
இன்றைய நாணய சந்தையில் 24 கேரட் தங்கம் விலை 59 ரூபாய் சரிந்து 2,553 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 54 ரூபாய் சரிந்து 2,387 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1090 ரூபாய் வரை குறைந்து 33610.00 ரூபாயாக விற்கப்படுகிறது.
9 லட்சம் லாட்
இன்று காலை ஷங்காய் கோல்டு எக்ஸ்சேஞ் சந்தையில் 900,000 லாட் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இதன் அளவு 27,000 ஆக இருந்தது.
சர்வதேச சந்தை தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2.4 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 1,106.90 டாலருக்கு விற்கப்படுகிறது.
பிளாட்டினம்
இந்நிலையில் பிளாட்டினம் விலை 5 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 942.49 டாலராக உள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07 பைசா குறைந்து 63.57 ரூபாயாக குறைந்துள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே பங்குசந்தை சரிவுடன் துவங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் பங்குகள் அதிகளவில் விற்கப்படுவதால், சென்செக்ஸ் குறியீடு 59 புள்ளிகள் 28,404 புள்ளிகளாக உள்ளது.
நிஃப்டி 24 புள்ளிகள் சரிந்து 8584 புள்ளிகளாக உள்ளது.
நல்ல ஐடியா!
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications