இன்போசிஸ் சக்கை போடு போட்டாலும்.. சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிந்தது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டம் இன்று துவங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் மந்த நிலையை அடைந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சுமார் 227.91 புள்ளிகள் சரிந்தது.

இன்போசிஸ் சக்கை போடு போட்டாலும்.. சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிந்தது..

இச்சரிவிற்கு அமெரிக்கப் பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வு குறித்த அச்சங்களும் முக்கியக் காரணமாகும். வட்டி உயர்வு குறித்த செய்திகளின் எதிரொலி நாணய சந்தையை அதிகளவில் பாதித்ததுள்ளது.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 231.28 புள்ளிகள் சரிந்து 28,188 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டியும் 70 புள்ளிகள் சரிந்து 8,529புள்ளிகளை எட்டி 8500 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றுள்ளது.

(3 மாதத்தில் 3,030 கோடி ரூபாய் லாபம்: இன்போசிஸ்)(3 மாதத்தில் 3,030 கோடி ரூபாய் லாபம்: இன்போசிஸ்)

இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் இன்போசிஸ், ஏர்டெல், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் மட்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.

இதில் இன்போசிஸ் நிறுவனம் 11.29 சதவீதம் உயர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE Sensex plunges over 240 pts

BSE Sensex plunged over 270 points down after the Parliament's first monsoon session failed to impress traders.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?