மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்துச் சந்தையில் சாதகமான நிலை உருவாகி வருவதால், சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் நாணயம் மற்றும் பங்குச்சந்தையில் இருந்து தங்களது முதலீட்டுக்களைக் குறைத்து வருகின்றனர்.
இதனால் நாணயச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகளவில் சரிவைச் சந்தித்துள்ளது.
(சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்)
5 வருட சரிவு
கடந்த ஒரு வார வர்த்தகத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 5 வருட சரிவை பதிவு செய்துள்ளது.
தங்கம் விலை
நாணய சந்தையில் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 2503.90 ரூபாயாகவும், 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2347.87 ரூபாயாகவும் உள்ளது.
44 ரூபாய் சரிவு
நேற்றைய விலையை ஒப்பிடும் போதும் தங்கம் விலை சுமார் 44 ரூபாய் அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல வெள்ளியின் விலை அதிகளவிலான சரிவைச் சந்தித்து 1 கிலோ பார் வெள்ளியின் விலை 31,356.96 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications