பெங்களூரு: இந்திய தனியார் வங்கிகளில் 2வது மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் சுமார் 20.7 சதவீத லாப உயர்வை பதிவு செய்துள்ளது.
2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 2,695.72 கோடி ரூபாய் லாபம் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இதன் அளவு 20.7 சதவீதம் அதிகமாகும்.

மேலும் இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 26.3 சதவீதம் அதிகரித்து 16,503 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
வட்டி வருமானம் மற்றும் பிற வருமானத்தைப் பார்க்கும்போது இந்நிறுவனத்தின் வருவாய் அளவு 26 அதிகரித்து 8,850.7 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இவ்வங்கியின் முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நம்பிக்கை அளித்துள்ளதால், பங்குச்சந்சதையில் இந்நிறுவனப் பங்குகள் இன்று 1.43 சதவீதம் உயர்ந்து 1114.35 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


Click it and Unblock the Notifications