பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்வு: ஜெயந்த் சின்ஹா
சென்னை: 2014 நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2013ஆம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் இதன் அளவு 2.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

இந்த அளவு இத்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன் அளவில் வாராக்கடன் மதிப்பு மட்டும் 5.43 சதவீதமாக உள்ளது. 2013ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 0.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் அளவை குறைவும் பொதுத்துறை வங்கி சேவை நாட்டு மக்களை அனைவருக்கும் சென்றடைய மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications