9% ஊதிய உயர்வு அளித்த சிடிஎஸ்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!

பெங்களூரு: இந்திய சந்தையில் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான சிடிஎஸ் தனது பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வு அளித்துள்ளது.

சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை ஒப்பிடுகையில் காக்னிசன்ட் நிறுவனம் அதிகளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளதால் இந்நிறுவனப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

(சிடிஎஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இத மட்டும் கிளிக் பண்ணுங்க போதும்)

காக்னிசன்ட் நிறுவனம்

காக்னிசன்ட் நிறுவனம்

இந்நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கு 7% - 9% வரையிலும், வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வும் அளித்துள்ளது.

பிற நிறுவனங்களில் என்ன நிலவரம்?

பிற நிறுவனங்களில் என்ன நிலவரம்?

டிசிஎஸ் நிறுவனத்தில் உள்நாட்டு ஊழியர்களுக்கு 8% வெளிநாட்டு ஊழியர்களுக்கு 2-4% சம்பள உயர்வு.

இன்போசிஸ் நிறுவனத்தில் சராசரியாக 6.7 சதவீதமும், விப்ரோ நிறுவனத்தில் 7 சதவீதமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1

ஜூலை 1

மேலும் இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜூலை 1ஆம் தேதி முதல் பணியாளர்களுக்குப் புதிய சம்பளம் மற்றும் பதவிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் தற்போது பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெகிவித்தார்.

பணியாளர் எண்ணிக்கை

பணியாளர் எண்ணிக்கை

கடந்த மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தில் 62,000 பேர் இணைந்தனர், இதில் பெரும்பாலானோர் இந்திய கிளைகளில் இணைந்துள்ளனர்.

தற்போது இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 217,700 ஆக உள்ளது.

 

ஐடித்துறை மதிப்பு

ஐடித்துறை மதிப்பு

இன்றைய நிலையில் இந்திய ஐடி துறையின் மொத்த மதிப்பு 146 பில்லியன் டாலர் ஆகும்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+